மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம்: தமிழக அரசு ஒப்புதல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம்: தமிழக அரசு ஒப்புதல்

மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம்: தமிழக அரசு ஒப்புதல்

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக 8,000 கள உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், மின்வாரியத்தில் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. 2027-ல் 5,000 பேர்; 2028-ல் 3,000 பேர் மின்வாரியத்தில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, 2027-ம் ஆண்டில் முதல் கட்டமாக 5,000 கள உதவியாளர்களும், 2028-ம் ஆண்டில் மேலும் 3,000 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வாயிலாக நடத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.341.26 கோடி செலவு புதிதாக நியமிக்கப்படும் 8,000 கள உதவியாளர்களுக்கான ஊதியச் செலவு ஆண்டுக்கு ரூ.341.26 கோடியாக இருக்கும் என மின்வாரியத் தலைவர் தமிழக அரசிடம் முன்மொழிவு அளித்திருந்தார். இந்த முன்மொழிவை ஆய்வு செய்த தமிழக அரசு, தற்போது 8,000 பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மின்வாரியத்தில் அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், அரசு வேலைக்காகத் தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, ஆட்சேர்ப்புப் பணிகளைத் தொடங்க மின்வாரியம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.