மின் தடை குறித்த செய்தி வராத நாளே இல்லை! – செந்தில் பாலாஜி விமர்சனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மின் தடை குறித்த செய்தி வராத நாளே இல்லை! – செந்தில் பாலாஜி விமர்சனம்

மின் தடை குறித்த செய்தி வராத நாளே இல்லை! – செந்தில் பாலாஜி விமர்சனம்

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை தொடர்ந்து நிலவி வருவதாகவும், மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முழுமையாக வெளிச்சந்தையைச் சார்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பான செய்திகள் வெளியாகாத நாளே இல்லை என்று தெரிவித்தார். அரசு நிகழ்ச்சிகள் முதல் தலைமைச் செயலகம் வரை மின்தடை ஏற்படுவதாகவும், பட்டமளிப்பு விழாக்களிலும் இந்தப் பிரச்சினை நீடிப்பதாகவும் அவர் கூறினார். மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், தனது துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிப்பதைத் தவிர்த்து, பிற துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதாக செந்தில் பாலாஜி விமர்சித்தார். சமூக வலைதளக் காணொளிகளை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்ததாகக் கூறிய அவர், தற்போதைய முதலமைச்சர் மக்களின் சிரமங்கள் குறித்து அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மின்வெட்டு ஏற்படும்போது முதலில் பியூஸ் கேரியர் திருட்டு காரணமாகக் கூறப்பட்டதாகவும், பின்னர் பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்று பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். திமுக ஆட்சிக் காலத்தில் தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறிய செந்தில் பாலாஜி, தவெக ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் கடந்தும் மின்வெட்டைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மின்சாரத் தேவையை எதிர்கொள்ள நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே கொள்முதலுக்கான ஏற்பாடுகளைச் செய்து, அதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்படும் என்று அவர் கூறினார். திமுக ஆட்சியின்போது ஒவ்வொரு ஆண்டும் மின்சாரத் தேவை அதிகரித்ததாகவும், ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக 4,349 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும், 8,600 மில்லியன் யூனிட் உபரி மின்சாரம் இருந்ததால், அதை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ததாகவும் கூறினார். மின்மாற்றிகள் குறைவாகவே பழுதடையும் தமிழகத்தில் தற்போது மின்வெட்டு ஏற்படுவது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) மின் உற்பத்தித் திறன் 13,000 மெகாவாட் வரை உயர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகத் தகவல் வந்துள்ளதாகக் கூறிய அவர், அந்த விவகாரம் குறித்து தற்போது விரிவாகப் பேசவில்லை என்றார். தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தியைக் குறைத்து, வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் நிர்மல்குமார் மேற்கொண்டு வருவதாக செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார். வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது மின்துறையின் ஒட்டுமொத்த நிதிநிலையைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு கொள்முதல் செய்ததை விமர்சித்த தவெக, தற்போது ரூ.35-க்கு மின்சாரம் வாங்குவதாகவும் செந்தில் பாலாஜி தனது விமர்சனத்தை முன்வைத்தார்.