மின் கட்டணம் அமைதியாக உயர்த்தப்பட்டது; மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என கீதாஜீவன் விமர்சனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
19 Jul 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 19 Jul 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மின் கட்டணம் அமைதியாக உயர்த்தப்பட்டது; மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என கீதாஜீவன் விமர்சனம்

மின் கட்டணம் அமைதியாக உயர்த்தப்பட்டது; மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என கீதாஜீவன் விமர்சனம்

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் மின்வெட்டு நிலை குறித்து கடுமையாக விமர்சித்தார்.அவர் பேசுகையில், "மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் தொடக்கத்தில் 100 யூனிட் மின்சார பயன்பாட்டுக்கான கட்டணம் எவ்வளவு இருந்தது, தற்போது அது எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எந்தவித பரபரப்பும் இல்லாமல் ஒரு யூனிட்டுக்கான மின் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளலாம்" என்று குற்றம்சாட்டினார்.மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், மாநிலத்தின் பல பகுதிகளில் இடையறாத மின்வெட்டு நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பல இடங்களில் மக்கள் கேள்வி கேட்கவோ, புகார் அளிக்கவோ முடியாத சூழல் இருப்பதாகவும், மின்தடைக்கான காரணங்கள் கூட வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், தற்போது மின்வெட்டு என்பது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதாக விமர்சித்ததுடன், "பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.