மாவீரன் அழகுமுத்துக்கோன் நினைவு நாள்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
11 Jul 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Jul 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மாவீரன் அழகுமுத்துக்கோன் நினைவு நாள்

மாவீரன் அழகுமுத்துக்கோன் நினைவு நாள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோனின் நினைவு நாளையொட்டி, பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணித் தலைவி அன்னலட்சுமி சகிலா கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அழகுமுத்துக்கோனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது வீர வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்காக ஆற்றிய தியாகங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசியவர்கள், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக முதன்முதலில் ஆயுதம் ஏந்தி வீரமரணம் அடைந்த முன்னோடி போராட்ட வீரர்களில் அழகுமுத்துக்கோன் முக்கியமானவர் என்றும், அவரது தியாகத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களின் வரலாற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த நினைவு நாள் நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.