மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், நேரில் சந்தித்தபோதும் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக செய்திகள் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியாகும் இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஒரு பெண் தனது கல்வி, திறமை, உழைப்பு ஆகியவற்றின் மூலம் உயர்ந்த பொறுப்பை அடைந்த பின்னரும், அவரை ஒரு பெண்ணாகவும் உடலாகவும் மட்டுமே பார்க்கும் இழிவான மனப்பான்மையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களின் திறமை, உழைப்பு மற்றும் நிர்வாகத் திறன் மீது முதலமைச்சர் கொண்டுள்ள நம்பிக்கையை இது வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார். இத்தகைய செயல்கள் அரசுக்கும் சம்பந்தப்பட்ட கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க ஆரம்ப நிலையிலேயே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தனது பதிவில் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.