மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் மீட்பு... ரூ.43.94 கோடி பிணைப்பணத்துக்குப் பிறகு விடுதலை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

27 Jul 2026 www.thinathulir.com

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் மீட்பு... ரூ.43.94 கோடி பிணைப்பணத்துக்குப் பிறகு விடுதலை

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் மீட்பு... ரூ.43.94 கோடி பிணைப்பணத்துக்குப் பிறகு விடுதலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர தொழிலதிபர் ரமணி, நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ரூ.43.94 கோடி பிணைப்பணம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயதான ரமணி, சூரத் நகரின் வைர வர்த்தகத் துறையுடன் தொடர்புடையவர். பின்னர் அமெரிக்காவில் குடியேறிய அவர், தனது குடும்பத்தினருடன் இணைந்து சர்வதேச அளவில் வைர வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழில் தொடர்பான பயணமாக மாலி சென்றிருந்த ரமணி, அங்கு மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் என கடத்தல்காரர்கள் கோரி மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ரமணியின் குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்டகால ஆலோசனைகளுக்குப் பிறகு, 4 மில்லியன் யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.43.94 கோடி பிணைப்பணமாக வழங்க ஒப்பந்தம் எட்டப்பட்டது.ஒப்பந்தத்தின்படி பணம் கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரமணி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டார்.இந்த கடத்தல் சம்பவம் மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்ற நடவடிக்கைகள் குறித்து தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.