மாற்றுத்திறனாளிக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

மாற்றுத்திறனாளிக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ

மாற்றுத்திறனாளிக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ

கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியாக மட்டும் இதை பார்க்க முடியாது; சமூகத்தில்மாற்றத்தைஏற்படுத்தும்போட்டியாகவே பார்க்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கனிமொழிசந்தோஷ் தெரிவித்துள்ளார்.கோவைசரவணம்பட்டிபகுதியில்கோயம்புத்தூர்கேலக்ஸி ரோட்டராக்ட் மன்றம் மற்றும்யாழ்ஹோம்ஸ்சார்பில்இந்திய பாரா கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.நாட்டின் 15 மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்தப் போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. ஐ.பி.எல். போட்டிகளுக்கு இணையான ஆர்வம் மற்றும் விளையாட்டு உணர்வுடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் பேசியதாவது:“இந்த நிகழ்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சாதாரண விளையாட்டு நிகழ்ச்சியாக மட்டும் கருத முடியாது. அவர்களிடம் இருக்கும் திறமைகளைவெளிக்கொண்டுவருவதுடன்,உரியவாய்ப்புகளையும்தளத்தையும்உருவாக்கும்நிகழ்வாகஇதுஅமைந்துள்ளது.இந்தியாவின் 15 மாநிலங்களில் இருந்து வீரர்கள் வந்து 3 நாட்கள் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. ஐ.பி.எல். போட்டிகளுக்கு நிகரான உற்சாகத்துடன் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது எனக்குமிகுந்தமகிழ்ச்சியையும்பெருமையையும்அளிக்கிறது.மாற்றுத்திறனாளிகளை ‘கடவுளின் குழந்தைகள்’ என்று அழைப்பது மட்டுமே போதுமானதல்ல. அவர்களின் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதோடு, மற்றவர்களுக்கு கிடைப்பது போன்ற சமமான வாய்ப்புகளையும், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில்,இவர்களுக்காக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டி பாராட்டுக்குரியது.தவெக அரசு விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விளையாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தி, அவர்கள் மேலும் உயரங்களை எட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.இத்தகைய சிறப்பான கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்த ரோட்டரி கேலக்சி அமைப்பினருக்கும், போட்டியில் பங்கேற்ற 15 மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.