மாதவரம், விருகம்பாக்கம் கால்வாய்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மாதவரம், விருகம்பாக்கம் கால்வாய்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு

மாதவரம், விருகம்பாக்கம் கால்வாய்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாதவரம் புழல் உபரிநீர் கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட ரெட் ஹில்ஸ் சாலையில் அமைந்துள்ள புழல் உபரிநீர் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை ஆணையர் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 அடி சாலையில் இருந்து புழல் உபரிநீர் கால்வாய் வரை ரூ.22.86 கோடி மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். மொத்தம் 1,160 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பணிகளைத் தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் ஆணையர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.