மாணவர்கள் அமைதியான முறையில் போராடினால் ஆதரவு; சாலையில் போராட்டம் ஏற்க முடியாது: அமைச்சர் ராஜ்மோகன்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

22 Jul 2026 www.thinathulir.com

மாணவர்கள் அமைதியான முறையில் போராடினால் ஆதரவு; சாலையில் போராட்டம் ஏற்க முடியாது: அமைச்சர் ராஜ்மோகன்

மாணவர்கள் அமைதியான முறையில் போராடினால் ஆதரவு; சாலையில் போராட்டம் ஏற்க முடியாது: அமைச்சர் ராஜ்மோகன்

மாணவர்கள் சட்டப்பூர்வ அனுமதி பெற்று அமைதியான மற்றும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் போராட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 'நீர் எழில் பள்ளி' திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்கள் அமைதியான மற்றும் அறவழிப் போராட்டங்களை நடத்துவதில் அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றார்.உரிய அனுமதியை பெற்று சட்டத்துக்கு உட்பட்டு போராட்டம் நடத்தினால் எந்த சிக்கலும் இருக்காது என்றும், ஆனால் திடீர் தூண்டுதல்களின் அடிப்படையில் நடைபெறும் போராட்டங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் சாலைகளைமறித்துபோராட்டம்நடத்தியதால்தான்கைதுநடவடிக்கைகளமேற்கொள்ளப்பட்டதாகவும், சாலைகள் போராட்டம் நடத்துவதற்கான இடமாக இருக்க முடியாது என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார்.மேலும், நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு என்பது தவெக அரசின் கருத்து என்றும் அவர் கூறினார்.டெல்லியில் மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் போராட்டத்திற்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், கல்வித் துறையை மாநிலப் பட்டியலில் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.