குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கி அமைச்சர் ரமேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின்படி, குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள சையது முர்துஷா பள்ளி மற்றும் ஸ்ரீரங்கத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்குச் சென்று மாணவர்களுக்கு கேக் வழங்கினேன். மேலும், அவர்களுடன் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தேன். கல்வி என்பது பாடப்புத்தகங்களைக் கற்பதுடன் மட்டும் முடிந்துவிடக் கூடாது. மகிழ்ச்சி, அன்பு, தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றல் ஆகிய பண்புகளும் மாணவர்களின் கல்விப் பயணத்தில் இடம்பெற வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவமும், வளமான எதிர்காலமும் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.