இந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் வேகமாக முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ருக்மிணி வசந்த், தற்போது மலையாள திரையுலகிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். கன்னட திரையுலகில் அறிமுகமான ருக்மிணி வசந்த், தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக, சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் அவருக்கு இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து ‘மதராஸி’, ‘ஏஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வந்த அவர், தற்போது மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைக்கிறார். நிவின் பாலிக்கு ஜோடியாக ருக்மிணி மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ருக்மிணி வசந்த் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளைத் தொடர்ந்து மலையாள சினிமாவிலும் தனது நடிப்பு பயணத்தை விரிவுபடுத்துகிறார். பல்வேறு மொழிகளில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ருக்மிணி வசந்தின் இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது