மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்... கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்... கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!

மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்... கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!

மதுரை அலங்காநல்லூர் அருகே கல்லூரிக்குச் சென்ற மாணவரை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இன்று காலை கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அலங்காநல்லூர் அருகே அவரை சில மர்ம நபர்கள் திடீரென வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அரிவாளால் மாணவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சஞ்சய் படுகாயமடைந்தார். ரத்தம் வழிந்த நிலையில் அருகிலுள்ள கிராமத்துக்குள் ஓடிய அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரை தாக்கியவர்கள் யார், தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.