மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்தி... நடிகை கொடுத்த பதில்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்தி... நடிகை கொடுத்த பதில்

மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்தி... நடிகை கொடுத்த பதில்

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மமிதா பைஜு. ‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் நடித்து வரும் மமிதா பைஜு, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’, சங்கீத் பிரதாப்புடன் ‘ஹலோ டியர்’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். மேலும், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார். இதற்கிடையே, மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதில், அவரது சகோதரர் மிதுன் பைஜுதான் அவரது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும், காதல் மற்றும் திருமணம் தொடர்பான முடிவுகளிலும் அவரே தலையிடுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்தத் தகவலைக் கண்ட மமிதா பைஜு, அதற்குத் தனது பாணியில் பதிலளித்துள்ளார். சம்பந்தப்பட்ட பதிவின் கீழ், ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘Whaaat?!’ என்ற வாசகத்துடன் கூடிய மினியன் ஸ்டிக்கரை அவர் பகிர்ந்துள்ளார். சகோதரர் குறித்து வெளியான இந்தத் தகவலுக்கு மமிதா அளித்த நகைச்சுவையான எதிர்வினை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகப் பரவும் தகவலை அவர் ஆச்சரியத்துடன் எதிர்கொண்டிருப்பது இந்தப் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. திரைப்படப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் மமிதா பைஜு, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்த வதந்தியாலும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறார்.