மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் உடற்பயிற்சி நிலைய ஊழியர் தற்கொலை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் உடற்பயிற்சி நிலைய ஊழியர் தற்கொலை

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் உடற்பயிற்சி நிலைய ஊழியர் தற்கொலை

நெல்லை மேலப்பாளையத்தில் மனைவி மீண்டும் வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த உடற்பயிற்சி நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மேலப்பாளையம் ஞானியாரப்பா தெருவைச் சேர்ந்த மஸ்தானின் மகன் அப்துல்ரசாக் (29). இவர் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உடற்பயிற்சி நிலையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் வல்லநாடு அருகே உள்ள மியான்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 10 மாதங்களேயான இரட்டை குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆயிஷா, கணவரிடம் தனியாக குடித்தனம் செல்ல வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆயிஷா, சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்துல்ரசாக் தனது மனைவியிடம் செல்போனில் பேசி, மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், ஆயிஷா வீட்டிற்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அப்துல்ரசாக், நேற்று அதிகாலை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்துல்ரசாக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.