முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் அமைச்சராக பொறுப்பேற்றார். இதனிடையே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இந்த நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதில் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திருச்சியில் உள்ள அன்பில் மகேஸ் இல்லத்திலும், சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிலும் போலீசார் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை லஞ்சமாக பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.