மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை பொன்மேனியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (செப்டம்பர் 17) மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுவதையொட்டி, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக இந்த அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மதுரையில் பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். இந்த நிகழ்வில் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டி கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அன்னதான நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டனர்.