மத்திய மந்திரி ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
18 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 18 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மத்திய மந்திரி ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

மத்திய மந்திரி ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டாவுக்கு கடந்த 13-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த நிலையில், ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும், ஜே.பி. நட்டா இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.