மத்திய அரசு துறைகள் மீது 70,584 ஊழல் புகார்கள்.. முதலிடத்தில் வங்கித் துறை..!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

03 Sep 2026 www.thinathulir.com

மத்திய அரசு துறைகள் மீது 70,584 ஊழல் புகார்கள்.. முதலிடத்தில் வங்கித் துறை..!

மத்திய அரசு துறைகள் மீது 70,584 ஊழல் புகார்கள்.. முதலிடத்தில் வங்கித் துறை..!

2025-ம் ஆண்டில் மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கித் துறைக்கு எதிராக அதிகபட்சமாக 9,933 புகார்கள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக ரெயில்வே துறைக்கு எதிராக 9,381 புகார்கள் வந்துள்ளன. 2025-ம் ஆண்டுக்கான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி பெறப்பட்ட மொத்த புகார்களில் 64,905 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5,679 புகார்கள் விசாரணையில் உள்ளன.அதிக புகார்கள் பெறப்பட்ட துறைகளில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை 6,531 புகார்களுடன் இடம்பெற்றுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக 4,834 புகார்களும், நிலக்கரி துறை ஊழியர்கள் மீது 4,118 புகார்களும், நிதித்துறை தொடர்பாக 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன.டெல்லி அரசுக்கு எதிராக 2,804 புகார்களும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கு எதிராக 2,722 புகார்களும் பெறப்பட்டுள்ளன. டெல்லி போலீசாருக்கு எதிராக 2,633 புகார்களும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக 2,139 புகார்களும் பதிவாகியுள்ளன. டெல்லி போலீசைத்தவிர்த்துஉள்துறைஅமைச்சகம்தொடர்பாக2,036புகார்கள்வந்துள்ளன.மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு எதிராக 2,030 புகார்களும், தொழிலாளர் நல அமைச்சகத்துக்கு எதிராக 1,894 புகார்களும், காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக 1,536 புகார்களும், தொலைத்தொடர்புத் துறைக்கு எதிராக 1,469 புகார்களும் பதிவாகியுள்ளன.ராணுவ அமைச்சகம் தொடர்பாக 1,410 புகார்களும், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்துக்கு எதிராக 1,123 புகார்களும் பெறப்பட்டுள்ளன. எக்கு துறை தொடர்பாக 1,023 புகார்களும், அஞ்சல் துறைக்கு எதிராக 1,003 புகார்களும் பதிவாகியுள்ளன.ஊழல் புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது நிலுவையில் உள்ள புகார்களை விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.