மதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பொதுக்கூட்டமும் கையெழுத்து இயக்க துவக்க விழா நடைபெற்றது!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
18 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 18 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பொதுக்கூட்டமும் கையெழுத்து இயக்க துவக்க விழா நடைபெற்றது!

மதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பொதுக்கூட்டமும் கையெழுத்து இயக்க துவக்க விழா நடைபெற்றது!

மதுரை மாநகர் 61-வது வார்டுக்கு உட்பட்ட மகபூப்பாளையம் ஜின்னா திடலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் நலனை பாதுகாப்பது, சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிகழ்ச்சியில் உரையாற்றப்பட்டது.மாவட்டச் செயலாளர் ம. கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புரையாளர் மதுக்கூர் ராமலிங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணி, ம.செ. மாரிக்கனி, தோழர் சசிகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும், சமத்துவத்துக்கான கோரிக்கை சாசனத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கமும் தொடங்கப்பட்டது. இதற்காக பெரிய பதாகை அமைக்கப்பட்டு, அதில் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.