மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று மாலை சென்ற முதல்-அமைச்சர் விஜய்க்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சார்பில் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, மதியம் அவுட்போஸ்டில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற அவர், மதிய உணவை முடித்த பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் மாலை 4 மணியளவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டார். கோரிப்பாளையம், நெல்பேட்டை, கீழவாசல், விளக்குத்தூண், ஜடாமுனி கோவில் தெரு வழியாக சென்ற முதல்-அமைச்சர் விஜய், கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலை அடைந்தார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு, அவர் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அறங்காவலர் குழுத் தலைவரும், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி அம்மாள் வரவேற்றார். அண்மையில் கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. கோவிலுக்கு சென்ற விஜய், பொற்றாமரைக் குளம், அம்மன் மற்றும் சுவாமி சன்னதி பிரகாரங்கள், புதிதாக புனரமைக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் 8 கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பூஜையின்போதும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்தந்த பூஜை நேரத்தில் அம்மனை தரிசனம் செய்வதால் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில், இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற சாயரட்சை பூஜையில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று அம்மனை தரிசித்தார். இந்த பூஜையின்போது மீனாட்சி அம்மன் பஞ்ச தசி வடிவில் அருள்பாலிப்பார். இந்த நேரத்தில் அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து, தொழில் சிறக்கும் என்பது நம்பிக்கையாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் அம்மன் மற்றும் சுவாமி சொக்கநாதர் சன்னதிகளில் முதல்-அமைச்சர் விஜய் வழிபாடு செய்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு, அண்மையில் அசாமில் இருந்து புதிதாக வாங்கப்பட்ட துர்கா என்ற யானை மூலம் மாலை அணிவித்து வரவேற்பும் அளிக்கப்பட்டது. அவருடன் புஸ்சி ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் சென்றனர். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விஜய் சென்ற வழித்தடத்தின் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று ஆரவாரம் செய்தனர். அவரது வருகையையொட்டி மதுரை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.