மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்... கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்... கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்... கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரண்டனர். உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல மாதங்களாக சுமார் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைகளுக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரருக்காக பிரத்யேக தங்கக் குடங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கலசங்களில் நிரப்பப்பட்டு யாகசாலையில் வைத்து தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தினர். கடந்த 11-ஆம் தேதி முதல்கால யாக பூஜைகள் தொடங்கிய நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த கால பூஜைகளும் நடைபெற்றன. நேற்று அதிகாலை 3.45 மணியளவில் 10-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அது நிறைவடைந்ததைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க, யானை மற்றும் டங்கா மாடு அணிவகுத்துச் செல்ல, ய