மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் - அமைச்சர் ஆனந்த்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் - அமைச்சர் ஆனந்த்

மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் - அமைச்சர் ஆனந்த்

மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக அமைச்சர் ஆனந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தொகுதிக்குள் வாக்கு சேகரிக்கச் சென்றபோது ஒரு பெண் தெரிவித்த கருத்தை நினைவுகூர்ந்தார். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், 2026-ம் ஆண்டில்தான் தமிழகத்துக்கு சுதந்திரம் கிடைத்ததாக அந்த பெண் கூறியதாகவும், அதற்கு காரணம் தங்கள் தலைவர் எனவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறும்போது, அவற்றை சிரித்த முகத்துடன் அணுகி தீர்வு காண்பவர் மரகதம் குமரவேல் என்று அவர் கூறினார். தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்றும், மக்கள் எப்போது அழைத்தாலும் அவர்களை சந்தித்து குறைகளை கேட்பவராக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். பதவி என்பது அதிகாரத்தை அனுபவிப்பதற்கானது அல்ல; மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு என்றும் அவர் கூறினார். மதுராந்தகம் தொகுதிக்கு புதிய நம்பிக்கை தேவைப்படுவதாகவும், அந்த நம்பிக்கையாக மரகதம் குமரவேல் இருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் ஆனந்த், மதுராந்தகம் தொகுதியை தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.