மதுராந்தகம் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் சாலை வலம்; வழிநெடுக மலர் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுராந்தகம் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் சாலை வலம்; வழிநெடுக மலர் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மதுராந்தகம் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் சாலை வலம்; வழிநெடுக மலர் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, மாமண்டூரில் முதல்-அமைச்சர் விஜய் இன்று சாலை வலம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெறுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து, முதல்-அமைச்சர் விஜய் கடந்த 25-ந்தேதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் 2-வது முறையாக விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இம்முறை பொதுக்கூட்ட மேடை இல்லாமல், சாலை வலம் மூலம் பொதுமக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விஜய் தனது சாலை வலத்தை தொடங்கினார். அவர் செல்லும் வழித்தடம் முழுவதும் பொதுமக்கள் திரண்டு நின்று மலர்களைத் தூவி வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரசார வாகனத்தில் மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுடன் நின்றபடி, விஜய் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் வரை சுமார் 35 இடங்களில் பிரசார வாகனத்தில் இருந்தபடியே தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு விஜய் வாக்கு சேகரிக்கிறார். இந்த சாலை வலத்தின் போது கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் வடக்கு புறவழிச்சாலை நுழைவு, மதுராந்தகம் தெற்கு புறவழிச்சாலை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அவர் செல்கிறார். மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் சென்று முதல்-அமைச்சர் விஜய் தரிசனம் செய்ய உள்ளார்.