மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் ஏற்கனவே த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் கூட்டாக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் களமிறங்குகின்றன. சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாலை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் கூட்டாக வேட்பாளர்களை அறிவித்தனர். அதன்படி, தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ப. லட்சுமணன் போட்டியிடுகிறார். மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி வேட்பாளராக களமிறங்குகிறார்.