மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டுகள் என 5 முனை போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், காலை 9 மணி வரையிலான வாக்குப்பதிவு சதவீத விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் 15.99 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 17.55 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதேபோல், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி இங்கு 19.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.