மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை: பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை: பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்

மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை: பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். தாராபுரம் தொகுதியில் தொடக்கத்தில் த.வெ.க. முன்னிலையில் இருந்த நிலையில், பின்னர் அதிமுக முன்னிலை பெற்றது. இருப்பினும், மதுராந்தகத்தில் த.வெ.க. தொடர்ந்து முன்னிலை வகித்தது. ஐந்து சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தாராபுரத்திலும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி த.வெ.க. மீண்டும் முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மதுராந்தகத்தில் 12,774 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை மதுராந்தகம் தொகுதியில் 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமாரவேல் 38,128 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன் 25,354 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 21,537 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். மரகதம் குமாரவேல் 12,774 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தாராபுரத்தில் 9,636 வாக்குகள் வித்தியாசம் தாராபுரம் தொகுதியில் 16 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா 48,615 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 39,039 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 31,067 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன்மூலம் சத்தியபாமா 9,636 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இரு தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.