முதல்-அமைச்சர் விஜய்-ராகுல் காந்தி சந்திப்பு நிறைவு - இருவரும் ஒரே காரில் பயணம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முதல்-அமைச்சர் விஜய்-ராகுல் காந்தி சந்திப்பு நிறைவு - இருவரும் ஒரே காரில் பயணம்

முதல்-அமைச்சர் விஜய்-ராகுல் காந்தி சந்திப்பு நிறைவு - இருவரும் ஒரே காரில் பயணம்

இந்தியக் கல்வித் துறையில் நிலவும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, கல்விக் கட்டண அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். ராஜஸ்தானின் கோட்டா நகரில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மகாராஷ்டிராவின் புனே, நாசிக் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்களிடையே ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். இதற்காக இன்று மதியம் 12.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, நீலாங்கரையில் உள்ள தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு ராகுல் காந்திக்கு விஜய் மதிய விருந்தளித்தார். தொடர்ந்து, இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். கட்சி நிர்வாகிகள் யாரும் பங்கேற்காத இந்தச் சந்திப்பில், தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலோசனை முடிந்ததும், விஜய்யும் ராகுல் காந்தியும் நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து ஒரே காரில் புறப்பட்டனர். பின்னர், பாலவாக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனிக்குச் சொந்தமான உணவகத்திற்குச் சென்ற இருவரும் அங்கு தேநீர் அருந்தினர். தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சந்தித்துள்ள நிலையில், சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.