முதல்-அமைச்சர் விஜய் நாளை வண்டலூர் ஊனமாஞ்சேரி செல்கிறார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முதல்-அமைச்சர் விஜய் நாளை வண்டலூர் ஊனமாஞ்சேரி செல்கிறார்

முதல்-அமைச்சர் விஜய் நாளை வண்டலூர் ஊனமாஞ்சேரி செல்கிறார்

சென்னை வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் போலீஸ் பயிற்சி அகாடமி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு (டிஎஸ்பி) இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 14-வது பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நாளை மாலை 4 மணிக்கு ஊனமாஞ்சேரியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார். பயிற்சி முடித்த டிஎஸ்பிக்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.