முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Jul 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Jul 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவுள்ள முதல் 2026–2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முன்னிட்டு இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. அரசின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்களை நேரடியாக சென்றடையும் புதிய நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள் வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பொதுப் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது, மாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படலாம் என்றும் அரசு வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.