மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்; சிறப்பு தபால் கவர் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்; சிறப்பு தபால் கவர் வெளியீடு

மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்; சிறப்பு தபால் கவர் வெளியீடு

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் உறை நேற்று வெளியிடப்பட்டது. மதுரையின் ஆன்மிகம், வரலாறு மற்றும் கலாச்சார அடையாளமாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் இந்த தபால் உறை வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென் மண்டல அஞ்சல் துறை இயக்குநர் பி.எஸ். நீரஜ் கலந்து கொண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். அதனை மீனாட்சி அம்மன் கோவில் தலைமை அறங்காவலர் ருக்மணி பழனிவேல்ராஜன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், கோவில் உதவி ஆணையர் மெய்வேல் உள்ளிட்ட அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மதுரையின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையை பிரதிபலிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு மத்திய அரசின் அஞ்சல் துறை வழங்கிய இந்த சிறப்பு மரியாதை, பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.