மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மாற்றம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மாற்றம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மாற்றம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய இயக்குனராக ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனரான பேராசிரியர் டாக்டர் விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவில் 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மருத்துவ சேவைகள் தொடங்கப்படும் என மத்திய அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த டாக்டர் மங்கு ஹனுமந்த ராவுக்கு பதிலாக பேராசிரியர் டாக்டர் விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான மருத்துவ சேவைகளை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் சூழலில், நிர்வாகத் தலைமையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.