மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம்.தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மணிமுத்தாறு அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேநேரத்தில், அருவிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதன் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.