மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

நடிகர் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பைசன்’ திரைப்படத்துக்குப் பிறகு, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் அடுத்த படமாக ‘மக்கள் காவலன்’ உருவாகி வருகிறது. இப்படத்தை சந்தோஷ் குமார் எழுதி இயக்குகிறார். கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு சாதாரண மனிதனை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஆனால் ஊழல் நிறைந்த அமைப்பு, அவன் முன் சரணடைவது அல்லது அதற்கு எதிராக போராடுவது என இரு வழிகளை மட்டுமே முன்வைக்கிறது. இப்படத்தில் கே. மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, அருள் மோசஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ‘பைசன் காளமாடன்’ படத்துக்குப் பிறகு தொடரும் இந்தக் கூட்டணியில், ‘மக்கள் காவலன்’ திரைப்படத்துக்கும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். ‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை உள்ளடக்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.