மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த சோகம்...!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த சோகம்...!

மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த சோகம்...!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்றபோது, டிராக்டர் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலத்த காயமடைந்தார். பாபநாசம் தாலுகா மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடுகிழி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மெலட்டூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் தலைமை காவலர் ராமர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோடுகிழி கிராமத்தில் எதிரே வந்த டிராக்டர் ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்த முயன்றனர். போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சித்ததை கவனித்த டிராக்டர் ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் அதிலிருந்து குதித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், ஓட்டுநர் இல்லாமலேயே டிராக்டர் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மீது மோதியது. இதில் அவரது தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து வலியால் துடித்தார். இதனைப் பார்த்த தலைமை காவலர் ராமர், உடனடியாக மெலட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் போதுமணி மற்றும் காவலர்கள், முத்துவேலை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த சோகம்...! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்றபோது, டிராக்டர் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலத்த காயமடைந்தார். பாபநாசம் தாலுகா மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடுகிழி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மெலட்டூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் தலைமை காவலர் ராமர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோடுகிழி கிராமத்தில் எதிரே வந்த டிராக்டர் ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்த முயன்றனர். போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சித்ததை கவனித்த டிராக்டர் ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் அதிலிருந்து குதித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், ஓட்டுநர் இல்லாமலேயே டிராக்டர் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மீது மோதியது. இதில் அவரது தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து வலியால் துடித்தார். இதனைப் பார்த்த தலைமை காவலர் ராமர், உடனடியாக மெலட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் போதுமணி மற்றும் காவலர்கள், முத்துவேலை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.