நாட்டில் நடைபெறும் மக்கள் கணக்கெடுப்பின்போது, ஒவ்வொரு வீடு மற்றும் குடும்பம் தொடர்பாக பல்வேறு அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் வீட்டின் அமைப்பு, அடிப்படை வசதிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயன்படுத்தப்படும் வசதிகள் உள்ளிட்ட மொத்தம் 33 அம்சங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பதிவு செய்யப்படும் முக்கிய விவரங்கள் 1.கட்டிட எண் (உள்ளாட்சி அமைப்பு வழங்கிய வீட்டு எண்) 2. மக்கள் கணக்கெடுப்பு வீட்டு எண் 3. வீட்டின் பிரதான சுவர், தரை மற்றும் கூரையின் பொருள் 4. வீட்டின் பயன்பாடு மற்றும் தற்போதைய நிலை 5.குடும்ப எண் 6. குடும்பத்தில் வழக்கமாக வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 7. குடும்பத் தலைவரின் பெயர், பாலினம் மற்றும் சமூகப் பிரிவு (SC/ST/மற்றவை) 8. வீட்டின் உரிமை நிலை 9. குடும்பம் பயன்படுத்தும் அறைகளின் எண்ணிக்கை 10.திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை 11. குடிநீரின் பிரதான ஆதாரம் மற்றும் அதன் இருப்பிடம் 12.விளக்குக்கான பிரதான ஆற்றல் ஆதாரம் 13. கழிப்பிடம், கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் குளியலறை வசதிகள் சமையலறை வசதி, LPG/PNG இணைப்பு மற்றும் பயன்படுத்தப்படும் பிரதான சமையல் எரிபொருள் 14. வானொலி, தொலைக்காட்சி, இணைய வசதி, கணினி அல்லது மடிக்கணினி 15. தொலைபேசி, கைபேசி அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாடு 16. மிதிவண்டி, ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், மொபெட் உள்ளிட்ட வாகனங்கள் 17. கார், ஜீப் அல்லது வேன் இருப்பது 18.குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவுத் தானியம் 19.கணக்கெடுப்பு தொடர்புக்காக மொபைல் எண் இந்தத் தகவல்கள், நாட்டின் மக்கள்தொகை, வீட்டு வசதிகள், அடிப்படை கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார நிலை குறித்த துல்லியமான தரவுகளைத் தொகுப்பதற்காக சேகரிக்கப்படுகின்றன.