மகளின் மருத்துவக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மகளின் மருத்துவக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை

மகளின் மருத்துவக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை

மராட்டிய மாநிலத்தில், பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கும், மகளின் மருத்துவக் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவித்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், நான்டெட் மாவட்டம், போர்கோன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷங்கர் அபன்ராவ் கிஷிர்சாகர் (46). விவசாயியான இவர் தனது நிலத்தில் சோயாபீன் பயிரிட்டிருந்தார். ஆனால், போதிய மழை பெய்யாததால் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், அவர் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். இதற்கிடையே, அவரது மகள் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். மகளின் கல்விச் செலவைச் சமாளிக்க முடியாத நிலையில், பயிர் பாதிப்பைக் காரணமாகக் கொண்டு கல்விக் கட்டண விலக்கு பெறுவதற்கான திட்டத்தில் கிஷிர்சாகர் விண்ணப்பித்திருந்தார். இருப்பினும், அவருக்கு கட்டண விலக்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது வயலுக்குச் சென்றார். அங்கு தனது நிலைமை குறித்து வீடியோ பதிவு செய்து பதிவேற்றினார். இதைப் பார்த்து குடும்பத்தினர் வயலுக்கு விரைந்து செல்வதற்குள், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மேலும், தனக்குக் கடன் தள்ளுபடியும், தனது மகளுக்குக் கல்விக் கட்டண விலக்கும் ஏன் வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பி, மாவட்ட ஆட்சியரிடமும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.