மேகதாதுவில் அணை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்; காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மேகதாதுவில் அணை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்; காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி

மேகதாதுவில் அணை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்; காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி

திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் யு.பி.ஐ. சேவை இலவசமாக இருப்பது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வரி மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடியும் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி கூறினார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விவகாரத்தில் தமிழகத்துக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒரு செங்கலைக் கூட வைக்க விடமாட்டோம் என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.