போப் ஆண்டவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி? – வாடிகன் தகவல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

போப் ஆண்டவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி? – வாடிகன் தகவல்

போப் ஆண்டவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி? – வாடிகன் தகவல்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் லியோவுக்கு (71) புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் புனித பேதுரு தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை நடத்திய போப் லியோ, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தனது உடல்நிலை குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது, தனது நுரையீரலில் சிறிய முடிச்சு வளர்ந்திருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது இந்த பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், போப் ஆண்டவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜெமெலி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், நுரையீரலில் இருந்த புற்றுநோய்க் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.