போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைக்கில் வந்த அமைச்சர் ஆனந்த்; கூவம் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

27 Jul 2026 www.thinathulir.com

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைக்கில் வந்த அமைச்சர் ஆனந்த்; கூவம் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைக்கில் வந்த அமைச்சர் ஆனந்த்; கூவம் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்

சென்னை கோயம்பேடு அருகிலுள்ள பாடிகுப்பம் பகுதியில் கூவம் ஆற்றை தூர்வாரும் பணிகளின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கள ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் காரில் வந்துகொண்டிருந்தபோது, ஆய்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தாமதத்தை தவிர்க்கும் நோக்கில், அருகில் இருந்த தவெக நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்தார்.அதனைத் தொடர்ந்து, கூவம் தூர்வாரும் பணிகளை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார். மேலும், கூவம் ஆற்றுப் பகுதியில் நேரில் சென்று நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தார்.