"பொய் தகவலை நம்பாதீங்க!" – திடீர் அறிக்கை வெளியிட்ட ஷிகர் தவான்; என்ன நடந்தது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

"பொய் தகவலை நம்பாதீங்க!" – திடீர் அறிக்கை வெளியிட்ட ஷிகர் தவான்; என்ன நடந்தது

"பொய் தகவலை நம்பாதீங்க!" – திடீர் அறிக்கை வெளியிட்ட ஷிகர் தவான்; என்ன நடந்தது

‘வேர்ல்ட் டி20 கான்டினன்ட் கப்’ (World T20 Continent Cup) கிரிக்கெட் தொடரில் தான் பங்கேற்க உள்ளதாக வெளியான தகவலை இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மறுத்துள்ளார். தனது ஒப்புதல் இல்லாமலேயே போட்டி ஏற்பாட்டாளர்கள் தனது பெயரைப் பயன்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட தொடரின்பங்கேற்பாளர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றிருப்பதை அறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதற்கு தான் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தனது பெயரை அனுமதியின்றிப் பயன்படுத்திய விவகாரத்தில், தனது குழுவினர் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாத அறிவிப்புகளைச் செய்தியாக வெளியிட வேண்டாம் என்றும், அவற்றை உண்மை என நம்ப வேண்டாம் என்றும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து தனக்கு அன்பும் ஆதரவும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தவானின் சாதனைகள் இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான், குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 167 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள அவர், 17 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் மொத்தம் 6,793 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 போட்டிகளில் விளையாடி 2,315 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 7 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும். அதேபோல், சர்வதேச டி20 போட்டிகளில் 68 ஆட்டங்களில் விளையாடியுள்ள தவான், 11 அரைசதங்களுடன் 1,759 ரன்கள் எடுத்துள்ளார். தனது அனுமதியின்றி கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக ஷிகர் தவான் தற்போது விளக்கம் அளித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.