‘பொன்னாடைக்கு பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்கலாம்’ – அமைச்சர் ராஜ்மோகன்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘பொன்னாடைக்கு பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்கலாம்’ – அமைச்சர் ராஜ்மோகன்

‘பொன்னாடைக்கு பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்கலாம்’ – அமைச்சர் ராஜ்மோகன்

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர், விழாக்களில் மரியாதை செலுத்துவதற்காக பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்துக்கு மாற்றாக புத்தகங்களை பரிசளிக்கும் நடைமுறையை ஊக்குவிக்கலாம் என்று தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது வீட்டில் தற்போது ஏராளமான பொன்னாடைகள் மூட்டை மூட்டையாக உள்ளன. அவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே, பொன்னாடை அணிவிப்பதற்குப் பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்த முயற்சிக்கலாம்” என்றார்.தனது வீடு மற்றும் அலுவலகங்களில் ஏராளமான புத்தகங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தான், பள்ளியில் படிக்கும் காலத்தில் மந்தமாகக் கற்கும் மாணவராக இருந்ததாகவும், தனது வேகத்தில் கற்றுக்கொள்ளும் குழந்தையாக இருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும், தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறிய அவர், “பேசுவது என்பது 50 பேர் முன்னிலையில் மட்டுமே இருக்க வேண்டியதில்லை. 5 பேர் முன்னிலையிலும் பேசினேன். சிறிய மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளேன்” என்றார்.தான் ஒருநாள் அமைச்சராக இருப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும் ராஜ்மோகன் கூறினார். ஆனால், தன்னால் சாதிக்க முடியும் என்று ஒருவர் நம்பியதாகவும், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் என்ற மாமனிதரின் நம்பிக்கையால் இன்று அமைச்சராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தனது வாழ்க்கையில் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் புத்தகங்களே துணையாக இருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், தனது வீட்டில் பதக்கங்களோ, கோப்பைகளோ அதிகம் இல்லாவிட்டாலும், எங்கு பார்த்தாலும் புத்தகங்கள்தான் இருக்கும் என்று கூறினார்.