பைக் மீது லாரி மோதி விபத்து: 2 இளைஞர்கள் பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பைக் மீது லாரி மோதி விபத்து: 2 இளைஞர்கள் பலி

பைக் மீது லாரி மோதி விபத்து: 2 இளைஞர்கள் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள அண்ணாமலை ஹோட்டல் அருகேயுள்ள புறவழிச்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அருண் மற்றும் நரேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.அப்போது அவர்கள் புறவழிச்சாலையில் யு-டர்ன் எடுத்து திரும்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த லாரி, அவர்கள் சென்ற பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற விழுப்புரம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பவத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.