பெல்ஜியத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பெல்ஜியத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

பெல்ஜியத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

பெல்ஜியத்தின் பிரஞ்சு மொழி பேசும் பகுதிகளில் கல்விக் கட்டண உயர்வு மற்றும் பள்ளிகளில் நிலவும் உள்கட்டமைப்பு குறைபாடுகளைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. குறிப்பாக, லீஜ் மற்றும் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் போராட்டத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அண்டை நாடான பிரான்சில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு, பெல்ஜியத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த தன்னிச்சையான போராட்டங்கள் தொடங்கியதாக கூறப்படுகிறது. உயர்கல்விக்கான ஆண்டு கல்விக் கட்டணத்தை பிரஞ்சு மொழி பேசும் சமூக அரசு €835-ல் இருந்து €1,194 ஆக உயர்த்தியிருப்பது மாணவர்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்திய மதிப்பில் இந்தத் தொகை ரூ.90,541.56-ல் இருந்து ரூ.1,29,469 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, பள்ளிகளில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாமை, மோசமான கட்டிடங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் மாணவர்கள் எதிர்த்து வருகின்றனர். லீஜ் நகரில் நடைபெற்ற பேரணியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது சில குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பள்ளி ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டு சாலைகளும் மறிக்கப்பட்டன. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கலகத் தடுப்புப் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களையும் பயன்படுத்தினர். ஏற்பட்ட மோதல்களில் 22 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். லீஜ் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 சிறுவர்களும் உள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், லீஜ் நகரில் பள்ளி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதே கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 2026-ல் பிரஸ்ஸல்ஸில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து நடத்திய போராட்டமும் பெரிய அளவில் வன்முறையாக மாறியது குறிப்பிடத்தக்கது.