பெரியார் நூலக விவகாரத்தில் தி.மு.க. ஊழலுக்கும் பொறுப்பேற்குமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பெரியார் நூலக விவகாரத்தில் தி.மு.க. ஊழலுக்கும் பொறுப்பேற்குமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

பெரியார் நூலக விவகாரத்தில் தி.மு.க. ஊழலுக்கும் பொறுப்பேற்குமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

கோவை பெரியார் அறிவுலகத்திற்கு உரிமை கொண்டாடிய தி.மு.க., அங்கு நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழலுக்கும் பொறுப்பேற்குமா என பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவையில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டதற்கு அக்கட்சியினர் முழு உரிமை கொண்டாடினர். ஒரு ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை, அடுத்த ஆட்சியில் திறந்து வைப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாமல் திட்டத்தின் முழு உரிமையும் தங்களுக்கே சொந்தம் என தி.மு.க.வினர் கூறினர். மேலும், நூலகத்தின் ஒவ்வொரு பணியையும் தனிப்பட்ட முறையில் தான் ஆய்வு செய்ததாக முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவருக்குப் பின்னால், கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் நின்றிருந்தனர். இதைப் பார்க்கும்போது, நூலகப் பணிகளில் எதையெல்லாம் ஆய்வு செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.மதுபானம் அருந்துவதை ஊக்குவித்து, பாட்டிலுக்கு ரூ.10 எனக் கூறப்படும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், தற்போது புத்தகங்கள் வாங்குவதிலும் ஊழல் செய்திருப்பதாகக் கூறப்படுவது மன்னிக்க முடியாத குற்றம். இது அறிவுத் திருட்டு மட்டுமல்ல. போலியான ஏ.ஐ. நூல்களை வருங்காலத் தலைமுறையினர் படித்திருந்தால், பெரியார் அறிவு நூலகம் என்ற பெயருக்கு மாறாக, பெரியாரின் அறநெறிகளுக்கு இடமில்லாத நூலகமாக அது மாறியிருக்கும். இதுவரை ஊழல் மூலம் மக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டி வந்தவர்கள், தற்போது குழந்தைகளின் அறிவையும் பாதிக்கும் வகையில் செயல்படத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உலகில் வேறு எங்கும் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெரியார் அறிவுலகத்திற்கு உரிமை கொண்டாடிய தி.மு.க., அங்கு நடந்ததாகக் கூறப்படும் ஊழலுக்கும் உரிமை கொண்டாடுமா? அதற்கான பொறுப்பை ஏற்குமா? இந்த விவகாரத்தில் தற்போதைய அரசு எந்தவிதப் பாரபட்சமும் இன்றி விசாரணை நடத்தி, அறிவுத் திருட்டை உடனடியாகக் கண்டறிய வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதுடன், நூல்கள் அனைத்தும் எழுத்தாளர்கள் குழுவைக் கொண்டு மறுஆய்வு செய்து மாற்றியமைக்கப்பட வேண்டும். இறுதியாக, ஊருக்கு ஒரு நூலகம் அமைப்பது ஊழல் செய்வதற்காகத்தானா என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.