பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வரும் பெண்கள் ஆசிய கோப்பை டி20 தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.