தமிழ்நாடு பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்த கருப்பு முருகானந்தம், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கருப்பு முருகானந்தம் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் புகாரைத் தொடர்ந்து கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தத்தை நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.