பெண் பாலியல் பலாத்கார வழக்கு: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பெண் பாலியல் பலாத்கார வழக்கு: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பெண் பாலியல் பலாத்கார வழக்கு: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 54 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 54 வயது பெண், கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி செண்ணாங்காரணி கிராமத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். அன்று இரவு சுமார் 8 மணியளவில் வீட்டின் அருகே சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (24) என்பவரை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கடம்பத்தூர் ஜெய்கணேஷ் ஆஜராகி வாதாடினார். சாட்சிகளின் விசாரணை நிறைவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா தீர்ப்பு வழங்கினார். அதில், ராஜா மீதான குற்றம் விசாரணையில் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 16 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.