புறம்போக்கு நில வீடுகளுக்கு NOC இல்லாமல் மின் இணைப்பு; தமிழக அரசு அரசாணை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

புறம்போக்கு நில வீடுகளுக்கு NOC இல்லாமல் மின் இணைப்பு; தமிழக அரசு அரசாணை

புறம்போக்கு நில வீடுகளுக்கு NOC இல்லாமல் மின் இணைப்பு; தமிழக அரசு அரசாணை

புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அரசு அதிகாரியிடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெறாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதுதொடர்பாக எரிசக்தித்துறை அமைச்சர் நிர்மல் குமார் கடந்த ஜூலை மாதம் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட வீடுகளுக்கு தடையில்லா சான்று இல்லாமலேயே மின் இணைப்பு வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையின்படி, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மட்டும் NOC பெறாமல் வீட்டு உபயோகத்திற்கான மின் இணைப்பு வழங்க முடியும். எந்தெந்த நிலங்களுக்கு பொருந்தாது? நீர்நிலை புறம்போக்கு மற்றும் மேய்ச்சல் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள், வன புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது. மேலும், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரெயில்வே நிலங்கள், மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கும் NOC இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் இந்த உத்தரவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.