‘புருஷன்’ படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

‘புருஷன்’ படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்

‘புருஷன்’ படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் விஷாலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் இயக்கி, மூன்று வேடங்களில் நடித்த ‘மகுடம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கலவையான விமர்சனங்களும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்தில் விஷால் நடித்து வருகிறார். ஏற்கனவே விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் ‘மதகஜராஜா’, ‘ஆம்பள’, ‘ஆக்சன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இருவரும் மீண்டும் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆக்சன் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஆம்பள’ படத்துக்குப் பிறகு மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘புருஷன்’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில், படத்தின் சண்டைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது விஷாலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷாலின் காயத்தின் தன்மை குறித்தோ, அவர் மீண்டும் எப்போது படப்பிடிப்பில் பங்கேற்பார் என்பது குறித்தோ படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.