புதிய தலைமைச்செயலகம்: முதல்-அமைச்சரின் ஒப்புதலின்றி நிலம் தேர்வா? கனிமொழி கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

புதிய தலைமைச்செயலகம்: முதல்-அமைச்சரின் ஒப்புதலின்றி நிலம் தேர்வா? கனிமொழி கேள்வி

புதிய தலைமைச்செயலகம்: முதல்-அமைச்சரின் ஒப்புதலின்றி நிலம் தேர்வா? கனிமொழி கேள்வி

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்யப்பட்டதில் முதல்-அமைச்சர் விஜயின் ஒப்புதல் பெறப்பட்டதா? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, சென்னையில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் இதுவரை இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, புதிய தலைமைச்செயலகம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை சுட்டிக்காட்டி கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கூறியுள்ள நிலையில், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எதற்காக பிறப்பிக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெறப்படாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச்செயலக வளாகத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.